
வீதியில் நின்றுகொண்டிருந்த குடும்ப பெண்ணை உதவிசெய்வதாக கூறி ஏற்றிச் சென்ற நபரால் பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்தவாரம் பூநகரி 10ம் கட்டை சந்திக்கும், முட்கொம்பன் கிராமத்திற்கும் இடையில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இளம் தாயாரான குறித்த பெண் பூநகரி மருத்துவமனைக்கு சென்றுவிட்டு பேருந்துக்காக காத்திருந்துள்ளார். பாலுட்டும் குழந்தை வீட்டில் இருந்தமையால் அவசரமாக வீடு செல்லவேண்டியதால் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிளை மறித்து வீடு செல்ல உதவி கேட்டுள்ளார்.
இதனையடுத்து உதவிசெய்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிய நபர், வழியில் அந்த பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
இதனால் வேகமாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெண் குதித்ததில் படுகாயமடைந்தார்.
சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர் தப்பி சென்றுள்ள நிலையில், காயமடைந்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.