வருடம் 1949. அல் ஷிண்டாகாவில் இருந்த துபாய் ஆட்சியாளர் இல்லம் வழக்கத்திற்கு மாறாக விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது. வந்திருந்த அனைவரும் அந்த மகத்தான தருணத்திற்காக காத்திருந்தனர்.
சற்று நேரத்திற்கெல்லாம் துபாய் ஆட்சியாளர் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்களுக்கு மகன் பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
வண்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட மாளிகைக்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விண்ணதிரும் பட்டாசுகள் மூலமாக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் பிறப்பு இந்த உலகத்திற்கு அறிவிக்கப்பட்டது.

about:blank
துபாயின் சரித்திரத்தை மாற்றி எழுதப் போகும் குழந்தை அதுவென அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஷேக் ரஷீத்தின் நான்கு மகன்களில் இவர் மூன்றாவது மகனாவார்.
இவருடைய அன்னை ஷேக்கா லத்திபா பின்ட் ஹம்தான் அல் நஹ்யான் முன்னாள் அபுதாபி ஆட்சியாளருடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி
ஆரம்ப நாட்களில் வீட்டிலேயே அரபி மற்றும் இஸ்லாமிய வகுப்புகள் ஷேக் முகமதிற்கு போதிக்கப்பட்டன. பின்னர் தேராவில் உள்ள அல் அகமதியா பள்ளியில் இவர் சேர்க்கப்பட்டார்.
பள்ளிப் படிப்பு முடிவடைந்தபின்னர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பெல் ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜ் (Bell School of Languages) ல் இளங்கலை முடித்த கையோடு புகழ்பெற்ற ராயல் மிலிட்டரி அகாடமியில் சேர்ந்தார்.

about:blank
ஷேக் முகமது பின்னாளில் எடுத்த முக்கிய முடிவுகள் அனைத்திற்கும் அவருடைய இங்கிலாந்து வாழ்க்கை காரணமாக அமைந்தது. எப்படி என்கிறீர்களா? அதற்கு அப்போதைய துபாய் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
மணல் தேசம்
அப்போதைய துபாய் என்பது வெற்று மணல் தேசம். இன்றைக்கு நாம் காணும் எந்த வளர்ச்சியின் வித்தும் துபாயின் மண்ணில் விழுந்திராத காலம் அது. அமீரகம் உருவாகியிருக்கவில்லை.
தனித்தனி எமிரேட்கள் தான். அதுவும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இரண்டாம் உலகப்போர் முடிந்து தொழில்நுட்ப புரட்சிக்கு உலக நாடுகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் தயாராகிக் கொண்டிருந்தன.
அப்படி இப்படியென பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு 1968 ஆம் ஆண்டு எமிரேட்களுக்கு சுதந்திரம் கொடுத்தது பிரிட்டன். உடனடியாக தனது படைகளை பிரிட்டன் அமீரக மண்ணிலிருந்து திரும்பப் பெற்றாலும் எமிரேட்கள் ஒன்றிணைய சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
தனித்தனியாக காலந்தள்ள முடியாது. பிராந்தியத்தில் தனித்து நிற்க, சாதனை படைக்க, மேற்கத்திய நாடுகளுடன் வளர்ச்சிப் போட்டியில் பங்கெடுக்க ஒற்றுமையே சிறந்தவழி என அனைத்து எமிரேட்களின் ஆட்சியாளர்களும் ஒப்புக்கொண்டார்கள். அமீரகம் உதயமானது. ஆண்டு 1971.https://googleads.g.doubleclick.net/pagead/ads?us_privacy=1—&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=2659675596&adf=424161831&pi=t.aa~a.3987527503~i.16~rp.4&w=674&fwrn=4&fwrnh=100&lmt=1626364376&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2445088797&psa=1&ad_type=text_image&format=674×280&url=https%3A%2F%2Fjvpnews.com%2Farticle%2Fhistory-of-the-hero-changed-the-capital-of-dubai-1626364004&flash=0&fwr=0&pra=3&rh=169&rw=674&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&adsid=ChEI8Lm_hwYQsoims9K2q5XwARIaAJC6_zq8c192Jp3AhBjsZaUwxfaNK1REPBw&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMCIsIng4NiIsIiIsIjkxLjAuNDQ3Mi4xMjQiLFtdLG51bGwsbnVsbCxudWxsXQ..&dt=1626364376225&bpp=1&bdt=1620&idt=-M&shv=r20210708&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D4f67aacbff95459b%3AT%3D1626364370%3AS%3DALNI_MbB7CSUzPjAevRp_LesXYNJU_j4hw&prev_fmts=0x0%2C160x600%2C160x600&nras=2&correlator=8219150718783&frm=20&pv=1&ga_vid=823752184.1621227662&ga_sid=1626364375&ga_hid=1670434705&ga_fc=0&u_tz=330&u_his=2&u_java=0&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=170&ady=1756&biw=1349&bih=568&scr_x=0&scr_y=0&eid=42530672%2C21067496&oid=3&pvsid=614811015321975&pem=170&ref=https%3A%2F%2Fjvpnews.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=11&uci=a!b&btvi=1&fsb=1&xpc=cTe1xE6hVG&p=https%3A//jvpnews.com&dtd=386
புது நாடு. எண்ணெய் வளம் இருக்கிறது. சரி, வளர்ச்சி? அதற்கான பணிகளில் அப்போதைய தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அமீரகத்தின் முகம் மெல்ல மாறத் துவங்கியிருந்தது.
வளர்ச்சியே இலக்கு
பிரிட்டனின் பிரம்மாண்ட கட்டமைப்பும், சீரான சாலை வசதிகளும் அங்கே தொழில்துறை வளர்ந்துவந்த வேகத்தையும் அருகில் இருந்து பார்த்த ஷேக் முகமது துபாய் திரும்பியதும் மணல் சூழ்ந்த சாலைகள் அவரை வரவேற்றன.
பெரும்பாலான இடங்களில் தார்ச்சாலைகள் என்பதே இல்லை. ஒருநாள் பிரிட்டனைப்போல அமெரிக்காவைப் போல துபாய் மாறும். இந்த உலகம் துபாயை உற்றுநோக்கும்.
அப்படியான காலத்தை உருவாக்காமல் ஒருநாளும் ஓயப்போவதில்லை என தனக்குள் சொல்லிக்கொண்டார் ஷேக் முகமது. அது ஒரு கனலைப் போல அவரது உள்ளத்திற்குள் தகிக்கத் துவங்கியது.
1995 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி துபாயின் பட்டத்து இளவரசராக ஷேக் முகமது நிர்ணயிக்கப்பட்டார். அவருக்குள் இருந்த லட்சியங்கள் சிறகடித்தன.
புதிய துபாய். கட்டமைப்பில், வளர்ச்சியில், போக்குவரத்தில், தொழில்துறையில் முன்னோடியான துபாய், என்னுடைய துபாய் என தனக்குள் சொல்லி சொல்லி ரத்தத்தில் ஊறிப்போயிருந்த பற்று அவரை புதிய முடிவுகளை எடுக்கும் துணிவைக் கொடுத்தன.
எல்லா நாட்களும் வசந்தங்கள் வருவதில்லை. அதுபோலத்தான் அந்தச் சம்பவமும் நிகழ்ந்தது. துபாயின் அப்போதைய ஆட்சியாளராக இருந்த ஷேக் முகமதுவின் சகோதரர் ஷேக் மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம் மறைந்தது பிராந்தியத்தையே உலுக்கியது.
இதன் காரணமாக ஷேக் முகமது 2006 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி துபாயின் ஆட்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். அடுத்த நாளே அமீரக உச்ச சபை அவருக்கு அமீரக துணைத்தலைவர் பதவியை அளித்தது. ஷேக் கலீஃபாவால் பின்னர் அமீரகத்தின் பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
சகோதரின் இழப்பு அவரை வாட்டியது. இருப்பினும் அவருடைய இலக்கில் தெளிவாக இருந்தார். உலகமே துபாயை திரும்பிப் பார்க்கவேண்டும். லட்சியவாதத்தை நெஞ்சில் சுமந்த ஷேக் முகமதின் அசுர உழைப்புடன் போட்டிபோட்டு கடிகார முட்கள் தோற்றுப்போயின.
தொழில்துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. துபாயில் தொழில்துவங்க உலகமெங்கிலும் இருந்து பெரும் நிறுவனங்கள் போட்டிபோட்டன. உட்கட்டமைப்பில் துபாயை உலகின் சிகரமாக மாற்றவேண்டும் என நினைத்தார்
அதன் விளைவாக புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் மற்றும் புர்ஜ் கலீஃபா ஆகிய கட்டிடங்களைக் கட்டி உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இப்படி, தான் நினைத்த கனவு துபாயை நிஜத்தில் உருவாக்கிக்காட்டி தான் ஒரு தன்னிகரில்லா தலைவன் என்பதை இந்த உலகத்திற்கு சொல்லாமல் சொல்லிக்காட்டினார்.
2008 ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார மந்தநிலை உருவான போதிலும் திறம்பட அந்த சூழ்நிலையை சமாளித்தார் ஷேக் முகமது. மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது என வாதத்தை தனது செயல்களால் நொறுக்கினார்.
தொடர்ந்து பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் இவருடைய அரசு மிகுந்த அக்கறை செலுத்திவருகிறது. இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழும் இவர் தானது சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாக தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சொல்லப்போனால் ஷேக் முகமது முதன்முதலில் ஏற்ற பதவி துபாய் காவல்துறை மற்றும் பொது பாதுகாப்புத்துறையின் தலைமைப்பதவி தான்.
அது அமீரகம் தோன்றாத காலம். அதன்பின்னர் பாதுகாப்பு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகிலேயே இளவயதில் பாதுகாப்பு அமைச்சராக பெற்றுப்பெற்றுக்கொண்டவர் என்ற பெருமையும் ஷேக் முகமதிற்கு உண்டு.
தன்னுடைய இளமைக்காலத்தில் எதற்காக கனவுகண்டாரோ, எதற்காக ஏங்கினாரோ, எதுகுறித்து அதிகம் உழைத்தாரோ அந்த நவீன துபாய் இன்று பல்வேறு துறைகளில் உலகத்திற்கு சவால் விடுகிறது.
இன்று நாம் பார்க்கும் துபாயின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குப் பின்னால் ஒருவருடைய பெயர் ஒளிந்திருக்கிறது. அந்தப் பெயர் ஷேக் முகமது பின் ரஷீத் மல் மக்தூம்.