
இந்தியாவில் ஏற்பட்டுள்ள இரண்டாவது அலை கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உதவிட பல்வேறு நாடுகள் முன் வந்துள்ளன. அந்த வகையில், லண்டனில் இருந்து இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் 46.6 லீற்றர் திறன் கொண்ட 450 ஒக்சிஜன் சிலிண்டர்கள் இன்று அதிகாலை தமிழகம் சென்றடைந்தன.
முன்னதாக குவைத்திலிருந்து 282 சிலிண்டர்கள், 60 ஒக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களைக் கொண்டு வந்த விமானம் ஒன்றும் இன்று காலை இந்தியா வந்தடைந்துள்ளது.