
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் திரு குணதிலகா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, தேசிய வீரர் தனுஷ்க குணதிலகாவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக இடைநிறுத்துவதுடன், அவரை எந்தவொரு தெரிவுக்கும் பரிசீலிக்க மாட்டோம் என இலங்கை கிரிக்கட் செயற்குழு தீர்மானித்துள்ளது.
மேலும், கூறப்படும் குற்றம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ள இலங்கை கிரிக்கெட், மேற்கூறிய அவுஸ்திரேலியா நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்ததும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறித்த வீரர் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.
ஒரு வீரரின் அத்தகைய நடத்தைக்கு “பூச்சிய சகிப்புத்தன்மை” கொள்கையை தான் கடைப்பிடிப்பதாகவும், சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொள்வதற்கு ஆஸ்திரேலிய சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் இலங்கை கிரிக்கெட் வலியுறுத்தியுள்ளது.