
நீர் கட்டணத்தினை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நீர் கட்டணத்தை 60 முதல் 70 வீதம் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.