பிரான்சில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், மோசமான வார்த்தைகளால் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யும் விதத்தில் சட்டம் கொண்டுவர இருப்பதாக தெரிவித்த மேக்ரான், ஆங்கிலத்தில் சற்று மோசமான அர்த்தம் கொண்ட ஒரு வார்த்தையை பயன்படுத்தினார்.

நான்கு மாதங்களில் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், உடனடியாக மேக்ரானின் வார்த்தைகளைப் பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சியினர், ஒரு ஜனாதிபதியாக இருப்பவர் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்க ஒன்று திரண்டுள்ளார்கள்.

கடந்த ஆண்டு, சுகாதார பாஸ் ஒன்றை அறிமுகம் செய்த பிரான்ஸ் அரசு, பிசிஆர் முறையில் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்று நிரூபிக்காதவர்கள், உணவகங்கள் முதலான இடங்களுக்குச் செல்ல தடை விதித்தது.

அந்த சுகாதார பாஸை தற்போது தடுப்பூசி பாஸ்போர்ட்டாக மாற்ற அரசு விரும்புகிறது. அதாவது, கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே இனி சுகாதார பாஸ் வழங்கப்படும்.

ஆகவே, புதிய சட்டம், கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்று நிரூபிக்கும் விதியை நீக்கி, கொரோனா தடுப்பூசி பெற்றால் மட்டுமே பொது இடங்கள் மற்றும் ரயில் பயணத்துக்கு அனுமதி என்னும் வகையில் விதி ஒன்றைக் கொண்டு வர உள்ளது.

தடுப்பூசி பெறாதவர்களை தண்டிப்பதற்கு பதிலாக, இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து அவர்களை எரிச்சலடையச் செய்து தடுப்பூசி பெறும் நிலைக்கு ஆளாக்க இருப்பதாக மேக்ரான் தெரிவித்தார்.

தடுப்பூசி பெறாதவர்களை சிறைக்கும் அனுப்பமாட்டேன், கட்டாயப்படுத்தி தடுப்பூசி அளிக்கவும் மாட்டேன், ஆனால், ஜனவரி 15 முதல் தடுப்பூசி பெறாதவர்களால் உணவகத்துக்கோ, தியேட்டருக்கோ, காஃபி ஷாப்புக்கோ கூட செல்ல முடியாது என்றார் அவர்.

ஆக, புதிய சட்டம் ஜனவரி 15ஆம் திகதி அமுலுக்கு வருகிறது. அதற்குப்பின், கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் உணவகத்துக்கோ, தியேட்டருக்கோ, காஃபி ஷாப்புக்கோ செல்ல தடை விதிக்கப்படும் என்பது பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சிலிருந்து தெரியவந்துள்ளது.  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal