
ஒன்பது இலங்கை குடிமக்கள் சுமார் 3.8 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான ருடு-175 இல் வந்த ஒன்பது பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள் அவர்கள் மலவாயிலில் மறைத்து வைத்திருந்த தங்கங்களை கைப்பற்றினர்.
இதன்போது மீட்கப்பட்ட மொத்த தங்கத்தின் எடை 7.304 கிலோ ஆகும்.
இதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் சுமார் 450-700 கிராம் தங்கத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
எனினும் தனித்தனியாக கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாவை தாண்டாததால் விசாரணைக்கு ஒத்துழைக்க அறிவித்தல் அனுப்பிய பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கொழும்பைச் சேர்ந்த இவர்கள் . 20 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.