எழுதியவர் – முனைவர் ஆ.பூபாலன்


விதை நெல் மூட்டை
விதை நீரில் ஊறவைத்தல்
நாற்றங்காலில் விதைத்தால்
நாற்றாக வளருதல்
நாற்று எடுத்தல்
முடிச்சு கட்டுதல்
நிலத்தில் முடிச்சு வீசுதல்
நடவு நடுதல்
களையெடுத்தல்
எலியிடம் தப்புதல்
பூச்சியிடம் பாதுகாத்தல்
நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்
கதிர் முற்றுதல்
கதிர் அறுத்தல்
கட்டு கட்டுதல்
கட்டு சுமந்து வருதல்
களத்துமேட்டில் சேர்த்தல்
கதிர் அடித்தல்
தூற்றுதல்
பதறுபிரித்தல்
மூட்டை கட்டுதல்
நெல் ஊறவைத்தல்
நெல் அவிழ்த்தல்
களத்தில் காயவைத்தல்
நெல் குத்துதல்
நொய்யின்றி அரிசியாதல்
அரிசியாக்குதல்
மூட்டையில் பிடித்தல்
எடை போட்டு வாங்குதல்
அரிசி ஊறவைத்தல்
அரிசி கழுவுதல்
கல் நீக்குதல்
அரிசியை உலையிடல்
சோறு வடித்தல்
சோறு சூடு தணிய வைத்தல்
சோறு இலையில் இடல்
இத்தனை தடைகளை தாண்டி வந்த சோற்றை கடைசியில் நாம் முழுவதும் சாப்பிடாமல் வீணாக்குவது மகா பாவம்.
உண்ணும் முன் உணருவோம்
உணவு நம் இலைக்கு வந்த பாதையை..