சொய்ஸாபுர பகுதியில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 68 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் அவரது உறவினருடன் வசித்து வந்ததாகவும், நேற்று மாலை அந்த வீட்டின் பக்கமிருந்து அலறல் சத்தம் கேட்டதாகவும், அந்த நேரத்தில் அவரது உறவினர் அச்சமடைந்து  வீட்டை விட்டு வெளியே ஓடியதாகவும்   பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal