தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் கனமழை காரணமாக மழைநீர் தேங்குதல் உள்ளிட்ட புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்கள் 1913, 044 25619206, 044 25619207 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை செயலி அல்லது டுவிட்டர் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal