இந்நாட்டில் ஏற்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான ஏதுவாக அமைந்த காரணங்களை வெளிப் படையாகக் கண்டறிந்து யதார்த்தங்களை தெரிந்து கொள்ளும் முகமாக பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை ஸ்தாபிக்கக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அவர்களின் யோசனையின் பிரகாரம் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் இந்த தெரிவுக் குழுவின் தவிசாளராக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவசம் நியமிக்கப் பட்டுள்ள பின்னனியில் இது வெறுமனே பேச்சுக்களுடன் மட்டுப்படுதப்படும் என்றும், பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பை நிருபராதியாக்கி அவர்களை சரி காணும் செயற்பாடுமே இடம் பெறும் என்பது தெளிவாக புலப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் இன்று (10) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம் பெற்ற போது கருத்துத் தெரிவிக்கையிலையே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வார பாராளுமன்ற அமர்வை நோக்கும் போதும் பசில் ராஜபக்சவின் கும்பல் ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தை நிறைவேற்ற மேலும் இரு வாரங்களுக்கு இழுத்தடிப்புச் செய்யும் பிரயத்தனத்தை முன்னெடுத்தாலும், எதிர்க்கட்சியில் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும் எதிர்க்கட்சியின் முயற்சியால் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய எதிர்க்கட்சியைப் பிரதி நிதித்துவப் படுத்தும் சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

போராட்ட காலத்திற்கு பிற்பாடான இந்த விடுபாட்டு காலப் பிரிவில் தமக்கு சார்பானவர்களை, தமது பிரதி நிதிகளை பயன்படுத்தி தம்மை சுத்தப் படுத்தி நல்லவர்களாக காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்.

அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டுள்ள இந்த தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதிலிருந்து விலகி எதிர்க்கட்சியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சபாநாயகர் அண்மையில் தெரிவித்ததன் பிரகாரம், எதிர்க்கட்தித் தலைவருக்கு பாராளுமன்றத்தில் சிறப்புரிமைகள் காணப்படுகின்றமையினால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தனது தலைமையில் இந்த பொருளாதார சீரழிவுக்கான காரணங்களை கண்டறிய எதிர்க்கட்சியின் தெரிவுக் குழுவொன்றை ஸ்தாபித்து இதனை முன் கொண்டு செல்வோம் என்றும் அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப் படுத்தும் 225 பேருக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுப்பதாகவும், சகலருக்கும் இதில் கேள்வி எழுப்பும் சந்தர்ப்பம் இருப்பதாகவும், இதற்கு எத்தகைய தடைகளும் தெரிவிக்கப்படாது என்றும் தெரிவித்தர் எதிர்க்கட்சித் தலைவர்.

நாட்டின் பொருளாதார வங்குரோத்துக்கான காரணங்களை கண்டறியும் அரசாங்கத்தின் தெரிவுக் குழுவிற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம் என்றும் சுட்டிக் காட்டினார்.

சபாநாகருக்கு இது குறித்து சிறிதேனும் நியாயப்பாடு இருந்திருந்தால் அவர் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரையே நியமித்திருக்க வேண்டும்.

மறைந்த ஜனாதிபதியான தனது தந்தையரின் ஆட்சிக் காலத்தில் தெரிவுக் குழுவொன்றிற்கு எதிர்க்கட்சியின் மங்கள முனசிங்க நியமிக்கப்பட்டார்.

இதற்கு பல்வேறு முண்ணுதாரணங்கள் காணப்படுவதாகவும், இவ்வாறு எதிர்க்கட்சிக்கு இத்தகைய தெரிவுக் குழுவின் தவிசாளர் பதவி வழங்கப் பட்டுள்ளதாகவும், குறிப்பிட்டளவு தடைகள் மற்றும் சமன்பாடுகள் அப்போதே நிலவும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

மொட்டுவையும் இன்னும் தெளிவாக குறிப்பிடுவதாக இருந்தால் பசில் ராஜபக்ச குழுவினரை சுத்தப்பட்டுத்தப்படுத்த எடுக்கும் இந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal