
எவர்கிரவுண் என்ற வணிக கப்பல், உலகின் முக்கிய வணிகப்பதையான சுயஸ் கால்வாயில் சிக்கியுள்ளதால் அப்பாதையூடான சகல கப்பல் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் விபத்தினால் கால்வாயின் தென்பகுதியில் சரக்கு கப்பல்கள் குவிந்து வருகின்றன. இவ்விபத்தானது உலக வர்த்தகத்தைப் பாதிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.