
கொழும்பிலிருந்து, தமிழ்- சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக, சொந்த இடங்களுக்குச் செல்பவர்களுக்கான எழுமாறான என்டிஜன் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வௌியேறும் இடங்களிலேயே இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்படும். அந்த இடங்கள் எவையென அறிவிக்க மாட்டோம் என, சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இடங்களை அறிவித்தால், அந்த இடங்களைத் தவிர்த்து செல்ல முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை கண்காணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.