இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் சீரற்ற காலநிலையும் நிலவி வருகின்றது.
இந்நிலையில் கனமழை காரணமாக எட்டியாந்தோட்டையிலிருந்து புளத்கொஹுப்பிட்டியவுக்கு செல்கின்ற வீதியில் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த வீதியின் பருசல்ல – களனித் தோட்டத்திற்கு இடையே உள்ள பாலம் முற்றாக வெள்ளநீரில் மூழ்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




