
‘டான்’ திரைப்பட வெற்றி குறித்து திரையுலகினர் பலர் பாராட்டிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன் ‘இந்திய சினிமாவின் ‘டான்’ உடன் ஒரு சந்திப்பு என்றும் அவருடனான இந்த 60 நிமிட சந்திப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும் என்றும் எனக்காக நேரம் ஒதுக்கிய ’தலைவர்’ அவர்களுக்கு ‘டான்’ படக்குழுவினர் சார்பில் நன்றி என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.