மாத்தறை சிறைச்சாலைக்குள் பொதி ஒன்று சுவருக்கு மேல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் அறிவித்துள்ளது.
நில்வல கங்கைக்கு படகு மூலம் வந்து சிறைச்சாலையை அண்டிய ஹோட்டல் வளாகத்தில் இருந்து சிறைச்சாலைக்குள் பொதி வீசப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இவ்வாறு வீசப்பட்ட பொதியிலிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் அதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள், போதைப் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளினால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பொதி மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
