
கண்டி – வத்தேகம – மீகம்மன பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பி சென்ற ஐந்து சிறுமிகளை தேடி பொலிஸார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
இந்த சிறுமிகளில் ஒருவர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஐந்து சிறுமிகளும் நேற்று நண்பகல் சிறுவர் இல்லத்திற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சிறுமிகள் அனைவரு 16 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது