வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் பணத்திற்காக ஆட்களின் உடல் உறுப்புகளை பெற்றுக்கொடுக்கும் தரகரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேகநபர் 02 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்று வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களை ஏமாற்றி பணம் தருவதாகக் கூறி சிறுநீரகத்தை பெற்றுக்கொள்வதாக பெண் ஒருவர் உட்பட ஐவர் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.


குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (31) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x