சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தமக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஒரு பில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்குமாறு கோரியுள்ளார்.

கடந்த 15ம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கூட்டத்தில் சரத் பொன்சேகா வெளியிட்டிருந்த கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது.

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டிருந்தார் எனவும் இதனால் தாம் பெரும் மன உலைச்சலுக்கு உள்ளானதாகவும் முரளிதரன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணியின் சார்பில் பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளதாகவும் பெரும் எண்ணிக்கையிலான உலக சாதனைகளை படைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சொந்தமாக பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 15ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் முரளிதரன், மஹிந்த ராஜபக்சகளின் சார்பில் பிரச்சாரம் செய்வதாகவும் அதன் பிரதியுபகாரமாக வெலிகந்த பிரதேசத்தில் முரளிதரனுக்கு 2000 ஏக்கர் காணி வழங்கப்பட்டதாகவும் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனவும் போலியானது எனவும் முரளிதரன் தனது சட்டத்தரணி ஊடாக தெரிவித்துள்ளார்.

எனவே இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நட்டஈடாக ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென முரளிதரன் கோரியுள்ளார்.

ஏழு நாட்களுக்குள் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படாவிட்டால் நீதிமன்றில் அவதூறு வழக்குத் தொடர நேரிடும் என சட்டத்தரணிகள் ஊடாக சரத் பொன்சேகாவிற்கு, முரளிதரன் அறிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal