
சட்டவிரோதமான உள்ளுர்துப்பாக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பு/ வவுணதீவு பகுதியில் விவசாயி ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த விவசாயி கைது செய்யப்பட்டள்ளார் என தெரியவருகின்றது. குறிப்பிட்ட நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.