அடிலெய்டில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2வது போட்டி பகல் இரவு ஆட்டமாக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் வார்னர் 95, மார்னஸ் லாபஸ்சேங் 103, ஸ்டீவ் ஸ்மித் 93, அலெக்ஸ் கேரி 51 ரன்கள் விளாச முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 473 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்து டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து தரப்பில் இங்கிலாந்து பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் டேவிட் மாலன் 80 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 62 ரன்களும் எடுக்க 236 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நாதன் லையன் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், கேமரான் க்ரீன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 237 ரன்கள் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் கேப்டன் ஜோ ரூட் 62 ரன்கள் எடுக்க நடப்பாண்டில் 1600 ரன்களை கடந்தார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட்ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் சச்சினை ஜோ ரூட். முந்தினார் ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன் அடித்த வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற இன்னும் 183 ரன்கள் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.