இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்துத் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்த நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்தார்.
ரசிகர்கள் பலரும் கோலியின் விலகலுக்கு கவலை தெரிவித்து வருகின்றனர், பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி, விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அனைத்து விதங்களிலும் சிறப்பாகச் சென்றது.
கேப்டன் பதவியிலிருந்து விலகுவது அவருடைய தனிப்பட்ட முடிவு, அதனை பிசிசிஐ முழுமையாக மதிக்கிறது.
இனிவரும் காலங்களில் இந்திய அணியை மிகப்பெரிய உயரத்துக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய வீரராக விராட் கோலி இருப்பார், வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.