மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் மீபே – இங்கிரிய வீதியில் நேற்று மாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மீபே – இங்கிரிய வீதியின் அங்கம்பிட்டிய – உலுகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 50 வயதுடைய பாலிந்தநுவர பிரதேச சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பாதுக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.