எழுதியவர் – அகன்.

இதுதான் உன் எல்லையென
சரியான தூரமும் இடமும் பார்த்து
கிழிக்கப்படும் கோடுகள்..
உயிரான உணர்வான உறவென
உளறித்திரிந்த உள்ளத்திற்கும்
உதட்டிற்கும்தான் அந்தக் கோடுகளின்
வரிகளும் வலிகளும் மிகப் பொருத்தமாகிறது..
அதிகம் உறிஞ்சிக்கொழுத்த
ஆணவத்தின் அலட்சியத்தால்
அழுத்தமாய் போடப்படும் அந்தக்
கோடுகளின் ஆழமறியாது..
கண்ணீரும் இரத்தமும் கொண்டு
அழிக்கமுயலும் அந்த அன்பிற்குத்தான்
இழப்புகள் கூடிக்கொண்டே போகிறது..
கூரிய பற்களிடமிருந்து பாதுகாப்பதாய்
சொல்லிப் போடப்பட்ட அந்தக்
கோடுகளின் பற்கள்பட்டு
கிழிவதெல்லாம் வண்ணத்துப்
பூச்சிகளின் சிறகாய்த்தான்
இருக்கிறது..
பாசத் துணியால் கண்கட்டியபடி
ஆசையாய் ஓடிவந்து..
அந்த கோட்டின் பள்ளத்தில்
இடறிவிழுந்து கத்திக் கொண்டிருக்கும்
அந்த அன்பினது கடைசிக்
கதறலையும் வெளிவிடாமல்..
அதன் வாய்பொத்தி பொறுமையாய்
பிரியும் உயிர் இரசித்துவிட்டு
மூடிக் கொள்கிறது அந்தக் கோடு.
கோடும் உறவுகளும்.
-அகன்-
பேரன்பும் மகிழ்வும்..
பகிர்ந்தமைக்கு?