கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஹங்கேரியில் ஏழு இலட்சத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் மொத்தமாக ஆறு இலட்சத்து 98ஆயிரத்து 490பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 32ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் இதுவரை 22ஆயிரத்து 681பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 814பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 272பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 56ஆயிரத்து 44பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 337பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக நான்கு இலட்சத்து 19ஆயிரத்து 765பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x