
கொழும்பு முழுவதும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக எட்டாயிரம் மொபைல் வாகனங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த வாகனங்களுக்கு மாத்திரமே வீதிகளில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறித்த வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதைகளில் மாத்திரமே அவை பயணிக்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த ஆலோசனைகளைப் பின்பற்றாத வாகனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 577 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கே இவ்வாறு பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.