கொழும்பு – கம்பஹா மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

களனி ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பிரதேசங்களில் அடுத்த 6 மணிநேரம் முதல் 12 மணித்தியாலங்களுக்கு சிறு வெள்ளம் ஏற்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, வத்தளை, தொம்பே, பியகம, கடுவெல, கொலன்னாவ, சீதாவக்க மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் விடாமல் பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகுலு ஓயா, களு ஆறு மற்றும் குடா ஓயாவின் தாழ்வான பகுதிகளிலும் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தாழ்வான பகுதிகளிலும், ஆற்றங்கரையோரங்களிலும் வசிப்பவர்கள், நீர்மட்டம் உயரும் அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SCSDO's eHEALTH

Let's Heal