
நிட்டம்புவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கொள்வனவு செய்த சீஸ் கட்டிகள் இரண்டில் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளசம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிற்கு கொண்டு சென்று திறந்து பார்க்கும் போது அந்த சீஸ் கட்டிக்குள் இரண்டு புழுக்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது.
அதனை பரிசோதித்து பார்த்த போது இது காலாவதியான சீஸ் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொள்வனவு செய்த வாடிக்கையாளர் விசனம் வெளியிட்டுள்ளார்.
எனவே பொதுமக்கள் சீஸ் கொள்வனவு செய்கையில் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
