கொழும்பு மருத்துவபீட மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

யுவதியின் காதலன் என அடையாளம் காணப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் வெல்லம்பிட்டியவில் வசிக்கும் பசிந்து சதுரங்க என்ற மாணவன் குறித்த யுவதியை கத்தியால் குத்திக் கொலை செய்திருந்தமை விசாரணையில் தெரியவந்திருந்தது.  

கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் 3ம் ஆண்டில் கல்வி கற்கும் ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயன பகுதியைச் சேர்ந்த  24 வயதுடைய சத்துரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற மாணவியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.

கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள், உறவினர்கள் தோள்களில் சுமந்தவாறு ஊர்வலமாக கிரிவத்துடுவ கல்கந்த பொது மயானத்திற்கு எடுத்துச் சென்று,  கல்கந்த பொது மயானத்தில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

“என் மகள் பல்கலைக்கழகத்திற்கு நேரமாகியதால் நேற்று முன்தினம் சாப்பிடாமல் கூட சென்றுவிட்டாள். மிகவும் புத்திசாலித்தனமான பெண். நன்றாகப் படிப்பாள். என் கண்களை போன்று அவளை நான் பத்திரமாக வளர்த்து வந்தேன். படித்து முடித்தவுடன் மணப்பெண்ணாக அவளைப் பார்க்க ஆசைப்பட்டேன்.

ஆனால் இன்று, மணப்பெண்ணாக பெட்டியில் வந்துள்ளார். இவ்வளவு நல்ல பிள்ளையை எவ்வாறு கத்தியினால் குத்த மனம் வந்தது. எனது நிலைமை எந்த தாய்க்கும் வரக்கூடாது” என மிகவும் உருக்கத்துடன் உயிரிழந்த மாணவியின் தாயார் கதறி அழுத காட்சி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal