கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் மேலும் அதிகரித்து செல்கின்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 66 ஆயிரத்து 499 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 26 இலட்சத்து 62 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 86 இலட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 3 இலட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 748 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 46 ஆயிரத்தை கடந்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x