
அகுணுகொலபெலஸ்ஸ, அகுணுகொலவெவ பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் அதிபர், இரு மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து , குறித்த பாடசாலையை தற்காலிகமாக மூட அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.