கொரோனா அச்சுறுத்தலிற்கு மத்தியில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது அராலியில் அமைந்துள்ள லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் நினைவிடத்தில் இடம்பெறும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

1992 ஓகஸ்ட் 8 ஆம் திகதி இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, கஜபா படையணியின் ஸ்தாபகர் உள்ளிட்டவர்கள் உயிரிழந்தனர்.

இதேவேளை யாழில் இடம்பெறும் நிகழ்வில், அண்மையில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு வாழ்வாதார உதவிகளையும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா வழங்கவுள்ளார்.

மேலும் இதற்காக தமிழ் அரசியல் கைதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

 இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது  அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு இராணுவத் தளபதியால் வாழ்வாதார உதவித்திட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குநர் தியாகேந்திரனின் நிதிப்பங்களிப்புடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, பலாலி படைத் தலைமை அதிகாரிகள், யாழ்.மாவட்ட அரச அதிபர் க. மகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை அராலியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட அருங்காட்சியகமும் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal