1. கோவிட் – 19 என்றால் என்ன ?

கடந்த வருடத்தின் இறுதியில் சீனாவில் அடையாளங் காணப்பட்ட SARS – COV -2 என்ற வைரசுத்
தொற்றால் ஏற்படுகின்ற நோய் நிலைமையாகும்

COVID – 19/கோவிட்– 19 என்ற சொல் ” Coronavirus disease 2019 “ என்ற
ஆங்கில சொற்றொடரின் சில முதல் எழுத்துக்களைக் கொண்டு ஆக்கப்பட்டது.

  1. தடுப்பூசிகள் எவ்வாறு வேலை செய்கின்றன?

இதை விளங்கிக் கொள்ள தொற்று நோயொன்று ஏற்படும் போது எம்முடலில் என்ன நடக்கிறதுஎன்பதை
புரிந்து கொள்ளல் உதவியாய் இருக்கும். எமக்குத் தெரியும்,தொற்று நோய்கள், வைரசு அல்லது பக்டீரியா ( Bacteria) போன்ற கண்ணுக்குத் தெரியா நுண்ணுயிரிகள் எமதுடலை தாக்குவதால் ஏற்படுகின்றன.தொற்றிய பின் கிருமிகள் எமதுடலில்
பல்கிப் பெருகுகின்றன.இது நோய்க்குரிய குணங் குறிகளை ஏற்படுத்துவதோடு எமது நோய்
எதிர்க்கும் தொகுதிக்குரிய கலங்களையும் தூண்டுகின்ற்ன. தூண்டப்படும் நோய் எதிர்க்கும் தொகுதி
பல்வேறு பொறிமுறைகளூடாக நோய்க்கிருமிகளை உடலில் இருந்து அகற்றப் போராடுகின்றது.

தடுப்பூசிகள் வீரியம் குறைக்கப் பட்ட நோய்க் கிருமிகளை அல்லது இறந்த கிருமிகளை அல்லது கிருமிகளின்
பாகங்களை கொண்டு தயாரிக்கப் படுகின்றன. இவற்றை உடலில் செலுத்துவதன் மூலம்
நோய் எதிர்க்கும் தொகுதி தூண்டப் படுகிறது. எதிர் காலத்தில் தொற்று ஏற்படும் சந்தர்ப்பங்களில்,நோய் எதிர்ப்புப் பொறிமுறை தயார் நிலையில் இருப்பதால் குறித்த கிருமிகள் உடலில் பல்கிப் பெருகும் நிலையும் அதனூடாக நோய் ஏற்படுத்தப் படும் நிலையும் தடுக்கப்படுகிறது.

  1. கோவிட் -19 தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது?

இத் தடுப்பூசி பல்வேறு முறைகளில் தயாரிக்கப் படுகிறது.

தற்போது ஐக்கிய அமெரிக்காவில் பாவனைக்கு விடப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளும் கொரோனா
வைரசின் மரபணுக்களைக் கொண்டிருக்கின்றன.இந்த மரபணுக்கள் தடுப்பூசியைப் பெற்றவரின்
உடலில் வைரசின் வெளிச் சுவரில் உள்ள சில பாகங்களைத் தோற்றுவிக்கும்.இந்த பாகங்களினால்
நோய் எதிர்ப்புத் தொகுதி தூண்டப்பட்டு வைரசிற்கான பிற பொருளெதிரிகள் உருவாக்கப்
படுகின்றன.இந்தப் பிற பொருளெதிரிகள் வைரசுத் தொற்று ஏற்படும் போது வைரசைத்
தாக்க தயார் நிலையில் இருக்கும். கோவிட் – 19 தடுப்பூசி நோயை ஏற்படுத்த வல்ல வீரியமிக்க வைரசைக்
கொண்டிருப்பதில்லை. எனவே தடுப்பூசி எடுப்பதானால் கோவிட் -1 9 ஏற்பட மாட்டாது.
அத்துடன் செலுத்தப்படும் வைரசின் மரபணுக்கள் உடலில் வைரசுக்களைத்
தோற்றுவிப்பதில்லை.

  1. கோவிட் – 19 தடுப்பூசி எவ்வாறு கொடுக்கப்படும் ? இது
    தசையில் போடப்படும் ஊசியாகும்.புயத் தசையில் கொடுக்கப்டும். வலது கைப் புயமா, இடது
    கைப் புயமா என நீங்களே தீர்மானிக்கலாம்.உங்கள் கைப் பழக்கத்தைக் கொண்டு, பொதுவாகப்
    பாவிக்கும் கையைத் தவிர்ப்பது நல்லது. இரண்டு
    தரம் இந்த ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். இரண்டு
    ஊசிகளுக்குமிடையிலான கால இடை வெளி போடப் படும் ஊசி வகைக்கேற்ப மாறுபடும்.உங்களுக்கு ஊசியை வழங்குபவர் இரண்டாவது ஊசியை எப்போது ஏற்ற வேண்டும் என அறிவுறுத்துவார். பொதுவாக
    மூன்று அல்லது நான்கு வாரங்களின் பின் இரண்டாவது ஊசி போடப்படும்.
  2. கோவிட்– 19 தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்துமா?

ஆம். முதலாவது ஊசியை விட இரண்டாவது ஊசி சற்றுக் கூடிய பக்க விளைவுகளைக் கொடுக்கும்.

  1. கோவிட்– 19 தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்ன?
    ஊசி போடப் பட்ட இடத்தில் ஏற்படும் வலி, வீக்கம், ஊசி போடப்பட்ட இடம் கட்டிபட்டது
    போல் தோன்றுதல், அழற்சியால் தோல் சிவப்படைதல், ஊசி போடப் பட்ட கையில்
    நிண நீர்க்கணுக்கள் வீக்கமடைதல்.

 காய்ச்சல்.

 நடுக்கம்

 உடல்
உளைவு அல்லது சோர்வு.

 தசைகளில்
வலி

 மூட்டு
நோ

 வயிற்றுப்
பிரட்டல், வாந்தி

 தலையிடி

இந்தக் குணங்க குறிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடிக்கலாம்.

இந்தபக்க விளைவுகள் நோய்க்கான குணங்குறிகள் அல்ல.

மாறாக எமது நோய் எதிர்க்கும் தொகுதி தடுப்பூசியிலுள்ள வைரசின் பாகங்களுக்கெதிராகத்

தொழிற்படுவதாலேயே இக் குணங்குறிகள் ஏற்படுகினறன.

மிகஅரிதாக சிலரில் இத் தடுப்பூசி ஒவ்வாமைத் தாக்கங்களை ஏற்படுத்தலாம். இந்த ஒவ்வாமைத்

தாக்கங்கள் ஊசி ஏற்றப் பட்ட சில நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்

ஏற்படலாம்.இதை அவதானிப்பதற்கு தடுப்பூசியைப் பெற்ற பின் உங்களை நிலையத்தில் சற்று நேரம்
தங்க வைக்க நேரிடலாம்.

  1. கடுமையான ஒவ்வாமைத் தாக்கங்களுக்கான குணங்குறிகள் என்ன?

 சுவாச
இடர்ப்பாடு.

 முகம்,
தொண்டை, நாக்கு, வீங்குதல்

 .நெஞ்சுப்
படபடப்பு.

 தோல்
முழுவதிலும் ஏற்படும் கடி, சொறி.

 தலைச்
சுற்று, மயங்கி விழுதல்.

  1. இந்தப் பக்க விளைவுகளுக்கான பரிகாரம் என்ன?

உங்களுக்கு ஒவ்வாமைக்கான குணங்குறிகள் காணப் பட்டால் அருகிலுள்ள வைத்திய சாலைக்கு உடனடியாகச்
செல்ல வேண்டும். தசை நோ , மூட்டு வலி, தலையிடி போன்றவற்றிற்கு வலி குறைக்கும் மாத்திரைகளை எடுக்கலாம்.

குணங்குறிகள் கடுமையாக இருந்தாலோ அல்லது நீண்ட நாட்களுக்கு நீடித்தாலோ வைத்திய ஆலோசனையைப்
பெற்றுக் கொள்ள வேண்டும்.

  1. பக்க விளைவுகளை கோவிட் -19 தொற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவது?

பக்க விளைவால் ஏற்படும் குணங்குறிகள் 4 தொடக்கம் 5 நாட்களுக்கு மேல் நீடிப்பதில்லை.

காய்ச்சலும் 99 – 101 பாகை பரனையிற்றை ( Fahrenheit ) விட அதிகரிப்பதில்லை. பக்க
விளைவுகள்,காய்ச்சல் அல்லது வலி குறைக்கும் மருந்துகளால் இலகுவாகக் குணமடையும்.

  1. தடுப்பூசி எடுப்பதன் மூலம் கோவிட் – 19 ஏற்படுமா?

இல்லை. கோவிட் – 19 தடுப்பூசி கோவிட் -19 நோயை ஏற்படுத்த மாட்டாது.

  1. கோவிட் -19 தடுப்பூசியை ஏன் எடுக்க வேண்டும்?

கோவிட் -19 தடுப்பூசியை எடுப்பதன் மூலம் கோவிட் – 19 நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள்

குறைக்கப்படுகினறன.

தடுப்பூசியைப் பெற்ற பின்னும் கோவிட் – 19 நோய் ஏற்பட்டாலும் அதன் தீவிரம் குறைவாகஇருக்கும்.அடுத்து
சமுதாயத்தில் பலர் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் கொரோனாவைரசின்
பரவலைக் கட்டுப்படுத்தலாம். இது இயல்பு வாழ்க்கைக்கு அனைவரும் விரைவாகத் திரும்ப
உதவும்.

  1. கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பானதா?

ஆம்.

கோவிட் – 19 தடுப்பூசி மிக வேகமாகத் தயாரிக்கப் பட்டுப் பாவனைக்கு விடப் பட்டுள்ளது.இதனால்இது பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுகிறது.இது பாதுகாப்பானதே.இந்தத் தடுப்பூசியும் மற்றைய தடுப்பூசிகளைப் போல மூன்று படி நிலைகளில் ஆய்வுக்குஉட்படுத்தப்பட்டேதயாரிக்கப் பட்டுள்ளது.பல இனங்களிலிருந்தும் தன்னார்வலர்களைத்தேர்ந்தெடுத்தேஇந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.அரசுகள்ஆராய்ச்சிக்காக அதிக நிதியை ஒதுக்கியதும், நவீன தொழில் நுட்பமும், பல தடுப்பூசிகளைத்
தயாரித்த முன்னனுபவமும், SARS மற்றும் MERS வைரசுக்களுக்கான தடுப்பூசிகளுக்காகத் தொடங்கப் பட்ட ஆய்வுகளுமே, கோவிட் -19 தடுப்பூசியை இவ்வளவு விரைவாகத் தாயாரித்து பாவனைக்கு விட உதவியாக இருந்துள்ளன.

  1. கோவிட்– 19 தொற்று ஏற்பட்டிருந்தாலும் தடுப்பூசியைப் பெற வேண்டுமா?

ஆம். கோவிட் – 19 தொற்று ஏற்படும் போது உடலானது வைரசுக்கெதிரான பிறபொருளெதிரிகளைத்தோற்றுவித்தாலும்
இவை எவ்வளவு நாட்களுக்கு உடலில் நீடிக்கும் என்பது தெரியாததால்கோவிட்– 19 தொற்று ஏற்படடவர்களும் அதற்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றே அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  1. எந்த வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்?

இது தடுப்பூசியைத் தயாரித்த நிறுவனத்திற்கேற்ப வேறுபடும்.இப்பொழுது அமெரிக்காவில்
பாவனைக்கு விடப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றை 16 வயதுக்கு மேற்பட்டவர்களும், மற்றயதை 18
வயதிற்கு மேற்படடவர்களுமே பெற்றுக் கொள்ள முடியும்.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தன்னார்வலர்கள் இந்த வயதுக்கு மேற்படடவர்களாக இருந்ததே இதற்குக்
காரணமாகும். மேலதிக ஆய்வுகளின் பிற்பாடு சிறுவர்களுக்கும் இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படும்.

  1. கர்ப்பவதிகள் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாமா?

கர்ப்பவதிகளில் இதன் பாதுகாப்புப் பற்றி ஆய்வுகள் தொடர்கின்றன.

  1. தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின் முகக் கவசம் அணிவதை நிறுத்திக் கொள்ளலாமா?

இப்போதைக்கு இல்லை என்பதே பதில். தடுப்பூசி 95% தொற்று ஏற்படாமல் தடுக்கிறது என ஆய்வுகள் காட்டினாலும்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.சமுதாயத் தொற்றைத் தடுப்பதற்கு பெரும்பாலானவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படவேண்டும்.அது வரை தடுப்பூசியைப் பெற்ற பின்னும் முகக் கவசம் அணிவதும், 6 அடியில்சமூக இடை வெளியைப் பேணுவதும், கைகளைக் கழுவி சுகாதாரம் பேணுவதும், முகத்தைத்தொடாது தவிர்ப்பதும் வைரசுத் தொற்றின் வேகத்தைக் குறைக்க அவசியமாகும்.

Dr.சிவாணி பத்மராஜா. USA

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal