மூன்று வேளை நாம் முழுவயிறு உணவு சாப்பிடுவதை விட அரை வயிறு உணவு சாப்பிட்டு தேவையான போது இரண்டு அல்லது மூன்று வகையான பழங்களை நாள்தோறும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அந்த வகையில் கொய்யாவில் அதிக மருத்துவ பயன்கள் உள்ளன. உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நமது உடல் எடையை சீராக வைத்திருக்க மிகவும் உதவுகிறது கொய்யாப் பழம்.
எனவே கொய்யாப்பழத்தை நாள்தோறும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். இத்தகைய நன்மைகள் நிறைந்த கொய்யாவை அளவுக்கு மீறி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..
தீமைகள்:-
- இயற்கையாக காடுகளில் வளரும் பழங்கள் பாக்டீரியா மாசுபாட்டால் பாதிக்கப்படும். இதற்கு கொய்யாவும் விதிவிலக்கல்ல. சில வகை பாக்டீரியாக்கள் நீர் மற்றும் மண் வழியாக கொய்யா போன்ற பழங்களில் ஒட்டிக்கொள்ளும்.
- பழத்தின் வெளிப்புறம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் பாக்டீரியாக்களால் உள்ளே செல்ல முடியும். ஆகவே கொய்யாவை உட்கொள்ளும் போது எப்போதும் கவனமாக இருங்கள். அளவோடு சாப்பிட்டு நலம் பெறுங்கள்.
- ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலில் நிலையான ரத்த சர்க்கரை அளவு இருப்பது அவசியம். ஆனால் அதிகம் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

- கொய்யாவை சாப்பிட்டாலோ அல்லது அதிக அளவு சாப்பிட்டாலோ சில நேரங்களில் வயிற்றுப்போக்கு அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி ஏற்படும். கொய்யாவில் உள்ள விதைகளால் இது நிகழ்கிறது.