
மியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து தலைமறைவாக இருந்து வரும் துணைஜனாதிபதி , இணையதளத்தில் வெளியிட்டுள்ள காணொளி உரையில்,
‘மியான்மர் வரலாற்றில் இது மிகவும் இருண்ட காலமாகும். ஆனால், விரைவில் விடியல் வரவிருக்கிறது.
நீண்ட கால இராணுவ ஆட்சியினால் அடக்குமுறைக்கு ஆளாகி அல்லலுற்று வரும் பல்வேறு இனத்தினரும் ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்கு, ஒருங்கிணைந்து மேற்கொண்டு வரும் இந்தப் புரட்சி மட்டுமே கைகொடுக்கும்.
இந்தப் புரட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். இராணுவத்தின் அடக்குமுறைக்கு அடிபணிந்து நமது புரட்சியைக் கைவிட மாட்டோம். ஒற்றுமையின் பலத்தால் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்போம் எனக் கூறினார்.