மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிதலே பகுதியில் வயிற்றோட்டத்திற்கு வழங்கும் மருந்தினை உட்கொண்ட பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் ஜயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 23 வயதுடைய தியகெப்பில்ல  சீகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளுக்கு குழந்தை பிறக்காமை காரணமாக தாயும் மகளும் கிரித்தலை பிரதேசத்தில் உள்ள சிங்கள மருந்து மற்றும் ஆலயம் ஒன்றை நடத்திச் சென்ற பெண்ணை  சந்திக்கச் சென்றுள்ளனர்.

பின்னர், அங்கிருந்த பெண்ணொருவர்  வயிற்றோட்டத்திற்கான மருந்தினை தயாரிப்பதற்கான சீட்டினை வழங்கியுள்ளார்.

அதில் உள்ளவற்றை கலந்து அந்த பெண்ணுக்கு வழங்கிய நிலையில், 3 ஆவது நாள் அதனை உட்கொண்டதன் பின்னர் மயக்கம் அடைந்துள்ளார்.

பின்னர் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal