நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனில் எதிர்கால பார்வை கொண்ட திட்டங்கள் அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், மிகவும் உணர்திறன் வாய்ந்த தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இதில் ஒரு கட்டமாக கிண்ணியா படகு விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கவனம் சொலுத்தப்படாத போது பேரிழப்பே ஏற்படும். பாடசாலை சிறுவர்கள் 4 பேர் உட்பட 6 பேரின் உயிர்களை காவு கொண்ட கிண்ணியா பாலத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் அவ்வாறே உள்ளது. 

இது “இருபதாவது திருத்தத்தின் பாலம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா குறஞ்சாக்கேணி கலப்பில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்றைய தினம் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந் நாட்களில் வடக்கு, கிழக்கில் ”பிரபஞ்சம்” நிகழ்ச்சித் திட்டம், “ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூச்சு’ நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சித் தொடரின் போதே அவர் இந் நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal