ஒரு நாள் பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோருக்கிடையே யார் சிறந்த கடவுள்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சிவன் தன்னுடைய நகத்திலிருந்து ஒரு துண்டை வெட்டி எறிந்தார். அது காலபைரவனாக உருவெடுத்து பிரம்மனின் தலையைத் துண்டித்தது. கால பைரவன் செய்த இந்தப் பாவத்தினால், அவர் உலகம் முழுக்க ஒரு பிச்சைக்காரர் போல் வலம் வந்தார். பிறகு காசிக்குச் சென்று தன்னுடைய பாவங்களை போக்கிக் கொண்டார். அதனைத் தொடந்து, வாரணாசியில் காலபைரவருக்குக் கோவில் ஒன்று அமைந்தது.

காலம் என்றால் நேரம். பைரவர் என்றால் சிவன். எனவே, நேரத்தைக் கட்டுக்குள் வைக்கும் சிவனாக காலபைரவன் இருக்கிறார். யார் ஒருவர் காலபைரவரை முழு மனதுடன் வணங்குகிறார்களோ அவர்களுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வாரி வழங்குகிறார். அதைத் தவிர்த்து, தீயசக்திகள் அவர்களை அண்டாமல் இருப்பதற்காக ஒரு பாதுகாப்புப் படலத்தை உருவாக்குவார். காலபைரவன் கண்கள் எப்போதும் கோபமுடன் இருக்கும். அதை தவிர்த்து அவரின் கழுத்தில் எலும்புக்கூடு மற்றும் பாம்புகளை கோர்த்த மாலைகளை அணிந்து இருப்பார். அவருக்கு புலிகளின் பற்கள் மற்றும் கொடூரமான கூந்தலும் இருக்கின்றன. இவர் நாயை தான் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

காலபைரவன் நாம் செய்யும் அனைத்துப் பாவங்களையும் கணக்கு வைத்துக் கொண்டு, அதற்கேற்பத் தண்டனைகளை நமக்கு வழங்கி வருகிறார். நீங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை நன்றாகப் பார்த்துக் கொண்டீர்கள் என்றால் உங்களுக்குக் கால பைரவரின் அருள் எப்போதும் கிடைக்கும். காலபைரவன் என்பவர் சுற்றித்திரியும் கடவுளாகும். எனவே, அவரின் கண்களில் படாத தீயவர்கள் யாரும் இல்லை.

கால பைரவர்களில் ஒட்டு மொத்தமாக 64 பைரவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சந்த பைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பிசான பைரவர், சம்ஹார பைரவர் எனும் எட்டுப் பெயர்களில் அடங்கி உள்ளார்கள். எட்டு திசைகளுக்குமான இந்தப் பைரவர்கள் ஒவ்வொரு விதமான சக்தியையும், திறன்களையும் கொண்டுள்ளார்கள்.

“ஓம் யைம் ஹ்ராம் க்ளீம் ஸ்ரீ படுக்பைரவய
ஓம் ஹ்ரீம் பம் படுகயா அபாதுதரனயா குரு
குரு படுகாயா ஹ்ரீம் ஓம் நமஹா சிவாயே
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரீம் ஹ்ரூம் க்ஷாம்
க்ஷேத்ரபாலயா காலா பைரவய நமஹா”

எனும் கால பைரவர் மந்திரத்தை ஒலிப்பதன் மூலமாக நாம் காலபைரவரை நேரடியாக வழிபடலாம்.

கால பைரவ மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். பில்லி, சூனியம், கெட்ட சக்திகள் என எதுவாக இருந்தாலும் காலபைரவரை வழிபடுவதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம். உடல் ஆரோக்கியம், செல்வாக்கு, செல்வம் என எதுவாக இருந்தாலும் காலபைரவரை வழிபடுவதன் மூலம் வேண்டியதை அடையலாம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x