
கடந்த பொங்கல் தினத்தில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதன் பின் இரண்டே வாரத்தில் ஓடிடியிலும் வெளியாகி வசூலை குவித்தது என்பதும் தெரிந்ததே. இந்த படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரண்டிலும் சேர்த்து 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கேரக்டரின் சிறுவயது கேரக்டரில் நடிகர் மகேந்திரன் நடித்திருந்தார் என்பதும் ஒருசில காட்சிகளில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் அவரது நடிப்பிற்கு விமர்சகர்களின் பாராட்டுக்கள் குவிந்து என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகர் மகேந்திரனுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. தன்னுடைய படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த நடிகருக்கு கார் பரிசளித்த லோகேஷ் கனகராஜ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.