எழுதியவர் – நிறோஜன்

கழுகுகளை வம்புக்கு இழுக்கும் ஒரே பறவை காகம் தான் .
ஆனால் , கழுகு காகங்களை எதிர்த்து ஒருபோதும் சண்டை போடுவதில்லை . மாறாக , கழுகு உயர உயர மேலே பறந்து செல்லும் . அப்போது , காகம் உயரச் செல்லும்போது மூச்சுவிடச் சிரமம் ஏற்பட்டுத் தானாகக் கீழே வந்துவிடும்.
அதுபோல நம் நிலையைக் கண்டு கேலி , கிண்டல் செய்யும் யாரையும் நாம் கண்டுகொள்ளாமல் , நம் இலக்கில் குறிக்கோளாக இருந்து , வாழ்வில் உயரச் சென்றால் நம்மைக் கேலி செய்த சில்லறைகள் எல்லாம் தானாகச் சிதறிவிடும்.