எழுதியவர் – சங்கரி சிவகணேசன்

மௌனத்தின் தவத்தில்
வரமாய்
பிறக்கும் உயிரின் மொழி
கவிதை…
சந்தணக் காட்டுக்குள்
தென்றலின் அசைவு போல
எப்போதும் சுகந்தமாய்
நாசியை நனைக்கும்
உயிர் மூச்சு கவிதை…
இன்பமோ துன்பமோ
எதை எழுதினாலும்
மயிலிறகாய்
மனம் வருடும்
அதிசய மொழி கவிதைமொழி..
கவிதை அதிசய உலகு
அதற்கு ஒருவழிப்பாதை
திரும்புதல் என்பது இயலாது..