
கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் பெறப்படுவதை தடுத்து உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
எம்.ஏ. மொஹமட் சலீம் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 19ம் திகதி வரையில் குறித்த மாநகர சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்க முடியாது.
அத்துடன் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள கல்முனை மாநகர முதல்வர் மற்றும் சபையின் உறுப்பினர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.