19 வயது பெண்ணின் தலையை தாயின் துணையுடன் சகோதரன் அறுத்து துண்டித்து செல்பி எடுத்து பகிர்ந்ததோடு, பொலிஸில் சரண் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் கடந்த ஞாயிற்று கிழமை இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் அவினாஷ் தோரே என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

வாலிபர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வீட்டில் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி கிர்தி மோட் வீட்டைவிட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்துகொண்டு வசித்து வந்தார். அதோடு கிர்தி மோட் அப்பகுதியில் உள்ள பண்ணையில் வேலைக்கும் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் , கடந்த ஞாயிற்று கிழமை அன்று கிர்தி மோட்டிற்கு போன் செய்த அவரது தாய், நானும், உன் தம்பியும் உன்னை பார்க்க ஆசை படுகிறோம் என கூறியுள்ளார். கர்ப்பமாக இருக்கும் கிர்தி மோட் தாயை காண போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அதற்கு சரி என கூற தாயும், மகனும் நேராக மகள் வேலை பார்க்கும் பண்ணைக்கு சென்றுள்ளனர்.

அப்போது, தாயை பார்த்ததும் உண்டான சந்தோஷத்தில் கிர்தி மோட் கட்டி அணைத்து வரவேற்று வீட்டுக்கு அழைத்து சென்று அவர்களை உட்காரவைத்துவிட்டு தேனீர் போட சமையலறைக்கு சென்றுள்ளார்.

அவினாஷ் உடல்நலமில்லாமல் பக்கத்து அறையில் படுத்திருந்தார். சிறிது நேரத்தில், கையில் கத்தியுடன் உள்ளே நுழைந்த பெண்ணின் தம்பி, அக்காவை சரமாரியாக தாக்கவே அவர் அலறியுள்ளார்.

அப்போது மகளின் கால்களை தாய் இறுக்கிப்பிடித்துக்கொள்ள, உடன் வந்த சகோதரன் கிர்தி மோட்டின் கழுத்தை துண்டாக அறுத்து வெளியே எடுத்து வந்து துண்டிக்கப்பட்ட தலையுடன் சகோதரனும், தாயும் செல்பி படம் எடுத்தனர்.

அதுமட்டுமல்லாமல் அந்த கொடூரன் அவினாஷையும் தாக்க முயன்றபோது அவர் தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரியிருந்தார். அதேசமயம் அக்காவை கொன்ற பின்னர், அவுரங்காபாத் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று சரணடைந்துள்ளான்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாயையும், மகனையும் கைது செய்துள்ளனர். இந்த குடூர சம்பவம் அப்ப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal