ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் தோணி ரசிகர்களுக்கு இரட்டை சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இன்னொரு தகவலும் வைரலாகி வருகின்றது.

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷி கர்ப்பமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதனை சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா கூறியதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை, கடந்த 2010-ம் ஆண்டு காதலி சாக்ஷியை தோனி திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் 2015-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் ஜிவா என்பது குறிப்பிடத்தக்கது.