கனேடிய நகரம் ஒன்றில் வகுப்பறையில் வைத்து ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்

மொன்றியலில் உள்ள John F. Kennedy High School என்ற பள்ளியில் படிக்கும் அந்த மாணவன், மறைத்து வைத்திருந்த கத்தியால் தன் ஆசிரியரை குத்த, காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அந்த மாணவனைக் கைது செய்த பொலிசார், அவனைக் காவலில் அடைத்துள்ளனர். அவன் வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறான்.

அவன் மீது, ஆயுதம் வைத்திருந்தது, பயங்கரமான நோக்கத்துக்காக ஆயுதம் ஒன்றை மறைத்து வைத்திருந்தது, பயங்கரமாக தாக்கியது, ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவனது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவனை வயது வந்தவனாக கருதி தீர்ப்பளிக்கக் கோர இருப்பதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில், கத்தியால் குத்தப்பட்ட தனது 40 வயதுகளிலிருக்கும் அந்த ஆசிரியருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என தெரியவந்துள்ளது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal