கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் லிபரல் கட்சி வெற்ற நிலையில் மீண்டும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது புதிய அமைச்சரவையில் அதிரடி மாறுதல்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் சில மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அந்த வகையில் கனடா பொது தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழரான Gary Anandasangaree நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார்.

இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்தது,
இன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்த புதிய மத்திய அமைச்சரவை அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்திருந்தார்.
மேலும், நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கும் அதே வேளையில், அனைத்து கனேடியர்கள் மற்றும் உலக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எங்கள் அரசாங்கம் கடுமையாக உழைக்கும் எனவும் தெரிவித்தார்.