
தேவையான பொருட்கள்:
- அரிசி – 1/4 கிலோ
- கத்திரிக்காய் – 6
- வெங்காயம் – 1
- கடுகு – 1/4 தேக்கரண்டி
- கரம் மசாலாத்தூள் – 1/2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 1
- மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
- இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
- குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு இரு பங்கு தண்ணீர் விட்டு மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.
- பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அத்துடன் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும்.
- கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கவும்.
- அந்தக் கலவையில் சூடான சாதத்தைச் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பரிமாறலாம்.