சுவிட்சர்லாந்து ஒளிக்கலைஞர் ஒருவர் மேகங்களையே திரையாக்கி பிரித்தானிய மகாராணியாருக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்தியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது .

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் உலக நாடுகள் பல, மறைந்த பிரித்தானிய மகாராணியாருக்கு பலவகையில் தங்கள் அஞ்சலியை செலுத்திவருகின்றனர்.

சுவிஸ் ஒளிக்கலைஞர் ஒருவர் வித்தியாசமாக தங்கள் நாட்டின் சார்பில் பிரித்தானிய மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள விடயம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

சொர்க்கம் செல்லும் இங்கிலாந்து மகாராணியார் என்னும் தலைப்பில், மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப் ஆகியோரின் உருவங்களை Gerry Hofstetter என்னும் சுவிஸ் ஒளிக்கலைஞர் வானில் ஒளிரச் செய்துள்ளார்

மேகங்களையே திரையாக்கி, அவற்றின் மீது ஒளியை விழச் செய்து இந்த விடயத்தை சாத்தியமாக்கியுள்ளார் அவர்.

அதேவேளை Hofstetter, முன்பு பிரித்தானிய தூதரகத்துடன் பணி செய்தவர் என்பதும், மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலியின்போது, சுவிஸ் ஆல்ப்ஸ் மலையின் மீது பிரித்தானியா தொடர்பான உருவங்களை ஒளிரச் செய்தவர் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal