ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் அனுசரணையில் யாழ்.மாநகர சபையினால் முதன் முதலாக நடாத்தும் “முத்தமிழ் விழா 2022” இன்றைய தினம் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

தமிழர்களின் பாரம்பரியத்தினை போற்றும் தைத்திருநாளில் இந்த முத்தமிழ் விழா இடம்பெறுகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் ஆரம்பிக்கப்பட்டு கோலாட்டம், மயிலாட்டம், மங்கள வாத்தியங்களின் இசைச் சங்கமத்துடன் ஆரம்பிக்கப்பட்ட விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தை வந்தடைந்துள்ளது.

ஐ.பி.சி தமிழின் அனுசரணையில், யாழ்.மாநகரசபையின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா 2022! நேரலையில்....

இங்கு பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கம்பவாரிதி இ.ஜெயராஜ் குழுவினரின் “இன்றைய உலக நடைக்கு பொருந்தாத அறங்களை வகுத்துத்தந்த வள்ளுவர் குற்றவாளியா?” எனும் தொனியிலான “வழக்காடுமன்றம்” உட்பட நாத சங்கமம் மற்றும் இசை ஆராதணை என இசை நிகழ்வுகளும், 

சத்தியவான் சாவித்திரி மற்றம் வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஆகிய வரலாற்றியல்களை சித்திரிக்கும் நாடங்களும் அரங்கேறவுள்ளன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal