
இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, லாபம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநரான எஸ். பி. ஜனநாதன் அவர்கள் நேற்றையதினம் காலமாகிவிட்டார். அன்னாரின் பிரிவுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா இரங்கல் கவிதை ஒன்றை எழுதி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையும்..
பிரார்த்தனைகளும்..
கை நழுவிச் சென்றாலும்
இயற்கை அன்னை
ஒரு போதும் கைவிடாது
உன்னைத் தழுவிக்
கொள்ளும்..
சென்று வா..
செந்நிறத் தோழனே.
பாரதிராஜா.